

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கஸ்தூரியார் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜொசபின் மேபில் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோடு ஈராண்டு அம்மா
நீ இல்லை இங்கு
நேற்றுவரை வாழ்ந்துவிட்டோம்
உன்னினைவில் நாம் இங்கு
நினைக்கையில் வியப்பாய்
நிஜமாய் நாம் வாழ்கிறோமா?
அம்மா என்று நாமழைக்க
யார் இங்கு நமக்குண்டு
எம் தாய்க்கு நிகராக
இவ்வுலகில் யாருண்டோ?
ஆண்டுகள் ஆனாலும்
ஆறவில்லை காயமம்மா
மீண்டும் உன் வயிற்றினில்
பிறந்திட வேண்டுமம்மா
உன் மடியில் வாழ்ந்திட
வரம்வேண்டி வா அம்மா
ஆண்டு இரண்டானாலும்
அழியாத அன்புருவாக
எங்கள் நெஞ்சங்களில் வாழும்
பண்புருவான அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் உங்கள் பிள்ளைகள்
விமலநாதன் குடும்பம்(கனடா), ரதினி குடும்பம்(கொழும்பு),
லோகநாதன் குடும்பம்(ஜேர்மனி),
ரகுநாதன் குடும்பம்(லண்டன்), ஜெகநாதன் குடும்பம்(சுவிஸ்)
Deepest sympathy