கண்ணீர் அஞ்சலி புகைப்பட கலைஞன் நண்பன் சந்திரன் அண்ணாவின் இழப்பு நம்ப முடியவில்லை. புகைப்பட துறைக்கு கனேடிய மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தடம் பதித்தவர். புகைப்படங்கள் எமது அன்றாட வாழ்விலும் செய்தி உலகிலும் முக்கியமானவை. புகைப்படங்கள் இல்லையேல் செய்திகள் இல்லை வாழ்வுகளும் இல்லை.அதே போல் புகைப்படங்கள் இல்லாமல் உலகின் கொண்டாட்டங்களும் இல்லை. புகைப்பட கலை எமது இன்றைய நிகழ்வுகளை நாளை காட்டுவது. கனேடிய தமிழர்கள் ஒரு இன்று ஒரு சிறந்த அனுபவமிக்க புகைப்பட கலைஞனை இழந்து இருக்கிறது. இத் துயரில் நாங்களும் இணைந்து கொண்டு சந்திரன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சிவநாயகமூர்த்தி மாஸ்டர் குடும்பம் - கனடா
Our deepest condolences to your family….! We miss you so much Santhiran Anna! Your memories are always with us…! Rest In Peace 🙏 From, Mokan family