Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JUN 1954
மறைவு 19 JUN 2023
அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா
காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்
வயது 69
அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா 1954 - 2023 வேலணை 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா இரத்தினராஜா (காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்) அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 15-07-2026

ஆண்டு மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!

உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும்
மீண்டும் வேண்டும் என
உங்களைத் தேடுகின்றோம் அப்பா!
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!

உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை!!

அன்னாரின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி 15-07-2026 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos