யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா இரத்தினராசா(காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப சொத்தை தொலைத்து
நாட்கள் உருண்டோடி ஓராண்டு காலம் ஆனாலும்
நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் எப்போதும்
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள்!
நாங்கள் எங்கு சென்றாலும்
நீங்கள் நிழலாய் பயணிக்கும்
அந்த உணர்வுதான் எங்களை
இதுவரை காலமாய் இவ்வுலகில் வைத்துள்ளது!
இந்த ஒரு வருடம் ஏழேழு ஜென்மம் மாதிரி
இந்த பிரிவு எங்கள் வாழ்க்கையில் நீங்கா வடு
அன்பான மகனாய், பாசமான கணவராய்,
ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித்தந்த அப்பாவாக,
கொஞ்சி பேசும் அம்மப்பாவாக,
ஆசையான பெரிய அண்ணாவாக
ஊரே மெய்க்கும் அளவுக்கு
தலைசிறந்த மனிதனாக வாழும்போது
யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றீர்கள்
நாங்கள் இவ்வுலகில் ஊனமாய் உலாவுகிறோம்
எங்கள் அழுகுரல் கேட்கிறதா
ஒவ்வொரு வினாடியும் ஏங்குகிறோம்
ஒரு முறையாவது
உங்கள் முகம் பார்க்க தவிக்கிறோம்
உங்கள் குரல் கேட்க துடிக்கிறோம்
ஒரு நிமிடம் கூட உங்களை நினைக்காத நாளே இல்லை அப்பா!
உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, மகள்கள்,
மருமக்கள், பேத்தி,
சகோதரர்கள்
மற்றும் உறவினர்கள்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 06-07-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.