2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா
காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்
வயது 69

அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா
1954 -
2023
வேலணை 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா இரத்தினராஜா (காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26-06-2025
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
தந்தை எனும் ஓர் சொல்லை
சொல்லிடவே நா துடிக்கிறதே
நீ இல்லை எனும் ஓர் உண்மை
இன்னும் எனக்கு புரியலையே....
ஈராண்டு போனது ஆனால் ஒரு நாள்
போனது போல் நாங்கள்
எல்லாம் துடிக்கின்றோம்!
தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர் (பிள்ளைகள்)