என் அன்புப் பெரியக்கா உங்களை இழந்தது எங்கள் குடும்பத்திற்கே பெரியதுயர். நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதை நினைத்துப்பார்கவே முடியவில்லை. எம் குடும்பத்தின் முதல் பெண் முத்தாய் குப்பிளானில் பிறந்தாய் இன்றும் முதல்மறைவாய் லண்டனில் மறைந்தாயே அக்கா.... இனி எப்படி உங்கள் சிரித்த முகம் பார்த்து கதைப்பேன். அதிவேகமாய் போவதற்கா இப்போதெல்லாம் தொடர்ந்து தொலைபேசியில் கதைத்தீர்கள். மனம் ஆறவில்லையக்கா. அண்ணா அண்ணா என்று என் கணவரை அழைத்து கதைத்தீர்களே. எவ்வளவு சந்தோசமாய் இருந்தேன் ஆனால் இன்று அவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுவிட்டாயே அக்கா. ஆற்ற முடியாத துயராய் மனதில் அவ்வளவு கனம். உன் உடலை தொட்டுப்பார்ககூட முடியாதவளாகி விட்டேனே. என்னால் இங்கிருந்து உங்களுக்கு பிராத்திப்பதை விட எதுகும் செய்ய இயலாது உன் ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கின்றேன். உன் இழப்பினால் வாடும் அப்பா, அம்மா, சகோதரர்கள், பிள்ளைகள்.