Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 SEP 1934
மறைவு 13 NOV 2021
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 87
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை 1934 - 2021 யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:10/11/2024

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!

இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி  நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!

என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 14 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 13 Dec, 2021