Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 AUG 1939
மறைவு 06 DEC 2023
அமரர் செல்வசோதி வள்ளியம்மை (தேவி)
வயது 84
அமரர் செல்வசோதி வள்ளியம்மை 1939 - 2023 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:24/11/2024

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வசோதி வள்ளியம்மை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா..
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா..

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
 என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!

அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
 உங்கள் முகம் காண.....

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
 மண்ணுக்கு வரமாட்டீரோ?
 எம்கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,