Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 AUG 1966
மறைவு 16 JAN 2018
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார் (செல்லா)
வயது 51
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார் 1966 - 2018 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை

பாச நதியில் ஓர் வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீ எம்மோடு
வந்திணைய வேண்டும்

வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...........

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!

தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்