

திதி: 21-12-2023
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி இராஜலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த
கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும் நம் நோய்நொடி
அம்மா என்பவள் ஓர் அதிசயம்
அவளே எம் இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!!!
நம் உள்ளத்தின் உள்ளே வாழும் ஓர் உன்னதமான தெய்வம் நம் அம்மா!!! Miss u a lot Amma