Clicky

தோற்றம் 27 AUG 1958
மறைவு 15 JUL 2022
அமரர் செல்வராஜா குமாரதேவன்
இளைப்பாறிய மத்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்- வவுனியா, மன்னார்
வயது 63
அமரர் செல்வராஜா குமாரதேவன் 1958 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Selvarajah Kumarathevan
1958 - 2022
Kumarathevan (1971- 1976 JHC)

பள்ளித்தோழன் குமாரதேவனவன் பிரிவைத்தாங்காது சொல்ல வார்த்தையின்றி காலனவன் கணக்கை நொந்து நல்ல உள்ளம் ஒன்று காலச்சக்கரத்தில் உதிர்ந்ததென்று அல்லல்படுகின்றோம் நண்பர்களே நாம் இன்று. எமது யாழ்.இந்துக் கல்லூரி வகுப்புத் தோழன் - பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறையில் எம்மில் சிலருடன் ஒன்றாகக் கல்வி கற்ற நண்பன் - முகப் புத்தகம் ஊடாக எம்முடன் தொடர்பில் இருந்த அன்பன் குமாரதேவனின் மரணச்செய்தி , எம்மெல்லோரிற்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பள்ளிக் காலத்தில் மிகவும் கெட்டிக்கார மாணவனாக - பல்கலைக் கழகத்தில் உண்மைமிக்க நண்பனாக - வேலைத் தளங்களில் திறமையும்- உதவிடும் மனப்பாங்கும் கொண்ட நிர்வாகியாகத் திகழ்ந்தவர் குமாரதேவன் அவர்கள். இவர் மணமுடித்து, இரு பிள்ளைகளைக் கண்டு , அவர்களை மருத்துவர் - பொறியியலராக்கி , மகளை முணமுடித்துக் கொடுத்து , பேரப்பிள்ளை ஒன்றையும் கண்டு - நிறைவான குடும்ப வாழ்க்கை நடத்திய பாசமிக்க குடும்பத் தலைவன். இவரின் மறைவினால் துயருறும் மனைவி - மகன் - மகள் - மருமகன்- பேரன்- தம்பி- உற்றார் - உறவினர் - நண்பர்கள் எல்லோரிற்கும், ஓராயம் அமையம் சார்பாக எமது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குமாரதேவன் அவர்களின் ஆன்மா, இறையடிகளில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. ஓராயம் அமையம் 17.07.2022

Write Tribute