அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 27 AUG 1958
மறைவு 15 JUL 2022
திரு செல்வராஜா குமாரதேவன்
இளைப்பாறிய மத்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்- வவுனியா, மன்னார்
வயது 63
திரு செல்வராஜா குமாரதேவன் 1958 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா குமாரதேவன் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் அந்தியேட்டி கிரியை எதிர்வரும் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதோடு அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 முகவரி:

 28A,மக்கெய்சர் வீதி,
உவர்மலை,
திருகோணமலை.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 51 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.