Clicky

தோற்றம் 27 AUG 1958
மறைவு 15 JUL 2022
அமரர் செல்வராஜா குமாரதேவன்
இளைப்பாறிய மத்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்- வவுனியா, மன்னார்
வயது 63
அமரர் செல்வராஜா குமாரதேவன் 1958 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேந்தனார் இளஞ்சேய் 16 JUL 2022 United Kingdom

எம் வகுப்புத் தோழன் குமாரதேவனின் மரணச்செய்தி அதிர்ச்சியைத் தருகின்றது. குமாரதேவன் + பிரேமச் சந்திரன் இருவரும் என் வீட்டிற்கு வந்து , தமது புது ஈருளிகளை நிற்பாட்டி விட்டு , நாம் மூவரும் சுந்தரலிங்கம் மாஸ்ரரிடம் tution சென்ற அந்த நாள்கள் - பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற நாள்கள் , குமாரதேவனின் தகப்பனார் எம் வீட்டிற்கு வந்து கதைத்து , மகனை சுந்தரலிங்கம் மாஸ்ரரிடம் tution எடுக்க ஒழுங்கு படுத்திய நிகழ்வு எல்லாம் மனக் கண்ணில் வந்து செல்கின்றது. நீண்ட இடைவெளியின் பின் , இரு வருடங்களுக்கு முன்னர் ,ஓராயம் விடயமாக குமாரதேவனுடன் கதைத்தேன் .அதன் பின் அவரின் தந்தையாரின் இறப்பறிந்து துக்கம் விசாரித்துக் கதைத்தேன். இன்று இச் தெய்தி அறிந்து மிக மிக மனவேதனைப் படுகின்றேன். குமாரதேவனின் குடும்பத்தாரிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குமாரதேவன் அவர்களின் ஆன்மா இறையடிகளில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. வேந்தனார் இளஞ்சேய்