9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1952
இறப்பு 18 JUN 2012
அமரர் செல்வநாயகம் கணபதி (மணியம்)
வயது 60
அமரர் செல்வநாயகம் கணபதி 1952 - 2012 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒளிச்சுடரே !
 குடும்பத்தின் தலைச்சுடரே- இன்று
 நீர் அணைந்து
 ஒன்பது ஆண்டுகள் கடந்ததுவே

 ஆற்றமுடியாத பிரிவு தான்
 ஏனோ இன்னும் எங்கள்மனம் இவ்
 இழப்பை ஈடுகொள்ள முடியவில்லை

இதயச்சுடரே !
அன்புள்ளம் கொண்டு எமை அறவணைத்தீரே
 இன்று நீர் இல்லாமல்
 இதயம் எனும் வீடு இருள் மயமானதே

 உம் குரல் கேளாது இங்கு
 நாம் அனைவரும்
 குரலடைத்து போனோம்
 எம் உயிரான உமை இழந்து
வாழ்வில் இன்பமின்றி தவிக்கின்றோம்

 எம் கண்ணீர் மல்க
கடவுளிடம் போனீரே- இன்றும் என்றும்
 உம் அழியா நினைவுடன்
 உம் ஆத்மாவிற்கு கண்ணீர்
 மலர்த்துகள்களை செலுத்துகின்றோம்!!!

  உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
 பிராத்திக்கும் மனைவி றீற்றா
 பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..

                          

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
மதன் - மகன்
டெலன் - மகன்
றீற்றா - மனைவி

Summary

Photos

No Photos