யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-08-2026
அம்மா நீங்கள் எமைவிட்டு நீங்கி
மூன்று வருடங்கள் பறந்தோடியதோ. நம்பமுடியவில்லை.
பார்க்கும் இடமெல்லாம் உங்கள் திருஉருவமே தெரிகின்றது.
நீங்கள் எமக்கு விட்டுச்சென்ற நினைவலைகள்,
அடிக்கடி வந்து தாலாட்டிச்செல்லும்.
நீங்கள் எம்முடன் இல்லையென்று
நாம்
என்றும் நினைத்ததில்லை.
அருவமாக எம்முள்ளிருந்து, எமை
வழிகாட்டிக்கொண்டிருகின்றீர்கள்.
நீங்கள் விரும்பியபடி, நாங்கள் கல்வியிலே சிறந்து,
உயர்பதவிகளில் எமைஇணைத்து,
பிறர் போற்ற வாழும்நிலை கண்டு மகிழ,
நீங்கள் இங்கு இல்லை.
எனினும் அங்கிருந்து எமை நோக்கியே
உங்கள் பார்வைஇருக்கும் என்பதும்,
எம்உணர்வுகளுக்குப் புரியும்.
வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் உங்கள்குரல்
எதிரொலிப்பதுபோல்தோன்றும்.
சமைத்து முடித்துவிட்டு எமை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் ஆழமான அன்பும்,
எம்மீது நீங்கள் கொண்ட பாசமும், வலிமிகுந்த நினைவுகள்.
எதைநாம் மறக்கமுடியும்.
உங்கள் நினைவுகள் எல்லாம் பட்டாம்பூச்சி போல
சிறகடித்து பறக்கின்றன.
எமக்காக நீங்கள் பட்ட துன்பங்கள்,
சுயநலமற்ற உங்கள் சேவை,
பிறருக்கு உதவுவதில் நீங்கள் காட்டிய அக்கறை,
சகோதரங்களில் நீங்கள் கொண்ட அளவற்ற பாசம்,
பிறரை மதிக்கும் உயர்ந்தபண்பு, அனைத்தையும்
அணைத்து வாழ்ந்து, இன்று எம் நெஞ்சில்
அணையாவிளக்காக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றீர்கள்.
நாம் இவ்வுலகில் வாழும்வரை உங்கள்
நினைவுகளை சுமந்தபடியே பயணிப்போம்.
எப்போதும் நாம்மகிழ்வோடு வாழ,எமை
இவ்வுலகில் வழிநடத்திச்செல்
வீர்கள்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலுமென்ன
உங்கள்நினைவுகள் எமக்கு சாமரம் வீசிக்கொண்டே இருக்கும்.
நிம்மதியாய் உறங்குங்கள் அம்மா.
அம்மா என்று நாம் அழைக்க இங்கு நீங்கள் இல்லை.
அம்மா இல்லாத வாழ்க்கை இல்லாத
ஒவ்வொருவருக்கும் ஆழமாய்ப்புரியும்.
அம்மா எனும் மந்திரச்சொல்லில்
அனைத்துமே அடக்கம்.
கனத்த இதயத்துடன் அப்பா, பிள்ளைகள்
நாங்கள், மூன்றாவது ஆண்டு நினைவலைகளைப்
பகிர்ந்து கொள்கிறோம்.