

யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தாயே நீங்கள் மறைந்து
ஈராண்டுகள் கடந்தனவா என
எம்மால் நம்பமுடியவில்லை
ஆனால் உங்கள் நினைவுகள்
எம்
மனதைவிட்டு என்றும் அகலவில்லை
வெளியிலே சென்று வீட்டினுள்ளே நுழைந்ததும்
பார்க்கும் இடமெல்லாம் உங்கள்
திரு முகமே நிழலாடுகிறது
அம்மா என்று நாம் அழைக்க நீங்கள்
இப்போ இங்கில்லையெனினும் உள்ளுணர்வு
எம்முள் இருந்து அம்மா என்று எமை
அறியாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
உயிருடன் இருக்கும் பொழுது அம்மாவின்
அருமை யாருக்கும் புரிவதில்லை
இல்லாத பொழுது அம்மாவின் பெறுமதி
விலைமதிக்க முடியாததென தினம் தினம்
எமை உணர்த்தி நிற்கின்றது
எம்மீது நீங்கள் அளப்பரிய பாசத்தையும்
நம்பிக்கையையும் வைத்தீர்கள்.
அந்த நம்பிக்கையை நாம் மூவரும் நிறைவேற்றியுள்ளோம்
அப்பா உங்கள் ஸ்தானத்தில்
அனைத்துமாய் இருந்து எம்மை வழிநடத்தி
அரவணைத்தாலும் நீங்கள் இல்லாத
இவ்விடம் அப்பாவை மிக வாட்டுவதை நாம் உணர்வோம்.
.
அழிக்கமுடியா ஆயிரம் நினைவுகளுடன்
அவர் வேதனைகளைத்தாங்கியபடி உலா வருகின்றார்
இவ்வுலகில் வாழும் வரை உங்கள் நினைவுகளோடு
நாம் பயணம் செய்வோம் அங்கிருந்து
எம் அனைவரையும் ஆசிர்வதியுங்கள்
உங்கள் நிழலில் நாம் இளைப்பாறிக் கொள்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி குடும்பத்தினர்.