யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-09-2024
ஓராண்டு் நினைவஞ்சலி
அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவளே
அன்புக்கு இலக்கணமாய் இரசனையுடன் வாழ்ந்தவளே
அமைதியாய் வாழ்வினை நிறைவாக்கிக் கொண்டவளே,
நீங்கள் இப்பூவுலகில் எமை விட்டுப்பிரிந்து
ஓராண்டு சென்றாலும்
உங்கள் நினைவுகள்
அடிக்கடிவந்து எமைத் தாலாட்டிச்செல்கின்றதே
உங்கள் நினைவுகள் ஆயிரமாயிரம்
எங்கள் மனதில் நிறைந்து கிடக்கின்றனவே...
எமைப் பண்பாய் வளர்த்து படிப்பதிலும் ஊக்குவித்து
பார்புகழ வாழவைத்தீரே,
உயர்ந்த நிலையினை
நாம் அடைய
எமை அணைத்து உணவூட்டி
விழித்திருந்து அருகிருந்து அறிவூட்டிநின்றீரே,
அம்மா என்று நாம் அழைக்க
இப்போ இங்கு யார் எமக்குண்டு...
நிழலாய் அருகிருந்து எமக்கு
என்றும் வழிகாட்டி நிற்பவளே
நீங்கள் இல்லாக் குறையை
உங்கள் ஸ்தானத்தில் இருந்து
அப்பாவே எமக்குத் தாயுமானவராய் இங்கு...
உங்களின் சிரித்த முகமும்
குறும்புத்தனமாய் நீங்கள்
எமக்கே செய்யும் கேளிக்கை நிகழ்வுகளையும்
நினைவூட்டிப் பார்க்கிறோம் அம்மா
ஓராண்டு அல்ல நாம் இவ்வுலகில் வாழும் வரை
பிரிக்க முடியாத பந்தம் எமக்கு நீ அம்மா
என்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்தபடி வாழும்
குடும்பத்தினர்...