Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 OCT 1948
இறப்பு 11 SEP 2023
அமரர் செல்லையா பரமலிங்கம்
ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுனர், London United Busways Ltd, தட்டயமலை தான்தோன்றி நாகதம்பிரான் ஆலய முன்னாள் தலைவர்
வயது 74
அமரர் செல்லையா பரமலிங்கம் 1948 - 2023 தண்ணீரூற்று, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 20/08/2025

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வத்தளை, பிரித்தானியா லண்டன் Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பரமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!
  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...

உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 11 Sep, 2023
நன்றி நவிலல் Wed, 11 Oct, 2023