யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மோகனதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்பானவனே, பண்பானவனே,
பாசமுடன் பழகும் கண்ணாளனே!
31 நாட்கள் ஆனபோதும்
உமை நாங்கள் இழந்த துன்பத்தை
ஈடுசெய்ய
முடியாமல் கதறுகின்றோம்.
கண்முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவே,
துடிதுடித்துப் பதைபதைத்த நினைவுகள்
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதே!
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களை தவிக்கவிட்டு
அமைதியாய் விண்ணுலகம்
சென்றாயே!
உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு வீட்டுக்கிரியை நடைபெற்று பின்னர் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைதொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி
Ganesha Mandapam.
90, RueÉmile Zola,
93120 La Courneuve, France