1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை மோகனதாஸ்
மோகன் ஸ்ரோர் மாங்குளம்- புங்குடுதீவு 8ம் வட்டாரம், இலங்கை
வயது 50

அமரர் செல்லத்துரை மோகனதாஸ்
1972 -
2023
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை மோகனதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றாயோ?
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்