யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி நெடிலிதெரு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி, திருகோணமலை, கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை, ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா தங்கவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-05-2024
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள்
இல்லை
என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Inthumathy, Our heartfelt condolences. Maheswarans