
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி நெடிலிதெரு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி, திருகோணமலை, கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை, ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா தங்கவேலு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2025
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு
இரண்டு ஆயிற்று!
ஆனாலும்
நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய்
எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு
போய்விட்டீர்களே அம்மா!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும்
எமை பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம்
சந்ததிக்கு ஒளி விளக்காய் ஒளி
தந்து வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
Inthumathy, Our heartfelt condolences. Maheswarans