

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்லாச்சி அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும் ,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கந்தையா, சின்னத்தம்பி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவச்செல்வன்(அருண்), இரத்தினேஸ்வரி(லலிதா ), மழலைச்செல்வன்(பாபு), கலைமோகன்(மோகன்), கலைவாணி(வாணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுணா, குணதாஸ், ஜசி, சாந்தி, தவநேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கலைச்செல்வன்(செல்வன்), கலைஇளவரசன், கலைவர்ணன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அர்க்கவின், அர்வின், அபியானா, செந்தூரிகா, விதூரிகன், ஜெனிவன், அனிஸ்வன், அனனிகா, மொனிசா, மொறிசன் அதிசன், கரிஷ், கார்த்திகன், காவியா லீனுஸ், லினோஜன், தர்ஷிகா, ரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்துவிடாதிருக்க வேரேன இருந்தீரே தாயே! மாயப் புயல்வடிவில் காலனவன் இன்நுயீர் பறிக்க சோகத்தை தந்து விட்டு சொல்லாமல் சென்றதென்ன?...