Clicky

பிறப்பு 25 APR 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் செபஸ்ரியான் எட்வேட் (மாமா)
அவுட் போட் மோட்டார் மெக்கானிக்
வயது 70
அமரர் செபஸ்ரியான் எட்வேட் 1949 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebastian Edward
1949 - 2019

துயர் பகிர்கிறேன் ? ——————— யாழ்பாணத்தில் புகழ் பூத்த அவுட்போர்ட் மோட்டர் மெக்கானிக் எங்கள் எட்வெர்ட் அப்பையா இறந்து விட்டார் அவரது நினைவுகளை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..! காக்கி நிற குட்டைக்காற் சட்டையும் வெள்ளை நிற கட்டைக் கைச் சட்டையும் விறுவிறு நடையும் கம்பீரப் பார்வையும் நெகிழ்ந்துருகும் பாசமும் சுட்டெரிக்கும் கோபமும் உம்மோடு பிறந்ததன்றோ சத்தியத்தின் வழி நின்றீர் அதை குற்ற மறவும் கற்றுத் தந்தீர் நாளாந்தம் விருப்போடு கல்விச்சாலை கூட்டிச்சேர்த்தீர் பரிவுடன் உம் அருகில் தூங்கின நினைவுகள் எல்லாம் இதோ வந்து வந்து தொலைக்கிறது அந்த நுளம்பு வலை அது வெறும் வலையல்ல அது உங்கள் பாச வலை எத்தனை நாள் இன்பமாய் தூங்கி எழுந்தேன் மறக்க முடியவில்லை .. உனக்குத்தெரியுமா? என்றாய் இன்னொரு நாள் அம்மாவிடம் ,கேள் பாட்டியிடம் கேள் ! என் கண்களை குப்பியிடம் பறித்தார்களாம் அந்தக்குப்பி யார் எங்கள் பாட்டி வீட்டு நாய்க்குட்டி அழகாய் இருந்த என்னை வாய்க்காலில் கிடந்து தூக்கி எடுத்தார்களாம் என்பீர் என்னை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்வீர் அரங்கை கூட்டி நாயகனாய் என்னை மேஜையில் நிறுத்தி ஒரு கூத்துப்பாடு பார்ப்போம் என்பீர் கூச்சமின்றி கால்களை தரையிலே உதைத்து கூத்தொன்று பாடி முடித்தேன் களிப்புடன் கைதட்டி ஆரவாரம் செய்தீர் என்னைக் கலைஞானாய் ஆக்கி அழகு பார்த்தீர் வெள்ளைக்காரனும் கண்டு வியந்த நுண் அறிவு இன்று பலரை மெக்கானிக் ஆக்கியது அந்த மாமேதை எங்கள் எட்வெர்ட் மாமா என்பார்கள் ஸ்ரார்டர் எட்டாமல் நுனிக்காலில் நின்று தத்தளிக்க போது ஓர் நாள் ஐரோப்பியன் சிரித்தான் ஆச்சரியமாய் கைகுலுக்கினான் மறு நாள் ஜப்பான் சுசுக்கி என்றால் உமக்கு கொள்ளைப்பிரியம் நான் சொல்வது வரலாறு! கடும் உழைப்பாளி அவன் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் இன்னும் மரிக்கவில்லை இந்த நொடி என்னுடன் அருகில் வந்துகொண்டு எந்தோள்களை எட்டி உலுப்புகிறார் அப்பையா செல்லமாக விரல்களால் இம்சை செய்கிறார் நான் கோபத்தோடு அவரைக்கடிந்து கொள்கிறேன் இதோ பாருங்கள் இந்த மனிசன் வெறும் மனிசன் இல்லை ஒரு மேதை வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருப்பார்..! சமாதானத்தோடு இளைப்பாறுங்கள் ? எஜே |டானியல்.

Write Tribute