Clicky

அன்னை மடியில் 05 JUN 1999
இறைவன் அடியில் 24 SEP 2021
அமரர் சற்குணராஜா பவீந்
Student- HSG, BIA
வயது 22
அமரர் சற்குணராஜா பவீந் 1999 - 2021 Männedorf, Switzerland Switzerland

கண்ணீர் அஞ்சலி

ரவீந்திரன் லண்டன் (யாழ்மைந்த)ன் 24 SEP 2022 United Kingdom

மறுபடி என்று காண்பேனோ?மனதினை கொன்று வாழ்வேனோ? கருவறை சுமந்த தாய் மறந்தாய். கனவுகள் கண்ட தந்தையை மறந்தாய். உடன் பிறந்த சகோதரி மறந்தாய். உறவுகள் மறந்து உயிர் பிரிந்தாய். உன் நினைவுகளால் நம் கண்களை நீராக்கினாய். நிரந்தரமற்ற உலகில் ஏன் இந்த அவசரம் உனக்கு? நீ இல்லை என்ற நினைவு என்றும் இல்லை நமக்கு. உன் குரல் நம் செவிகளுக்கு வரவில்லை. உன் உருவம் நம் கண்களுக்குத் தரிசனம் தரவில்லை. ஆனாலும் நீ எம்மோடு இருக்கிறாய். பேசுகிறாய். சிரிக்கிறாய். நகைச்சுவை செய்கிறாய். நம்மோடு நடந்து வருகிறாய். நீ எங்கும் போகவில்லை. நம் அருகேதான் இருக்கிறாய். நீ இல்லை என்று யார் சொன்னது? உன் உருவம் இல்லாவிட்டால் உன் நினைவுகள் போய்விடுமா? உன் கடந்த கால நினைவுகள் எப்போதும் நம்மோடு கைபிடித்து நடந்து வரும். அங்கே பார். உன் அம்மா அழுகிறாள். அவளை அணைத்து ஆறுதல் கூறி விடு. அப்பாவை முத்தமிட்டு கண்ணீரைத் துடைத்து விடு. தங்கையின் தோளில் கைபோட்டு அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறி விடு. உறவுகளைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று கூறு. ஆனால் நீ கூறினாய். "எல்லோரும் பயணம் செய்கிறோம். சிலர் இடையில் இறங்கி விடுகிறார்கள். அதில் நானும் ஒருவன். எல்லோரும் அவரவர் இடம் வரும்போது இறங்கத்தான் போகிறார்கள். யார் முன்னே பின்னே என்பதுதான் முடிவில்லாத கேள்வி! உங்கள் பயணம் தொடரட்டும்" என்றாய். மகனே! உன் பதிலால் நம் மனக் கவலை தீருமா? வருடங்கள் வந்து போகும். உன் நினைவுகள் நம் நெஞ்சை விட்டு நீங்குமா? தள்ளிப்போன நாட்கள் உன் பிரிவை தாங்குமா? என்றும் நீ நம்மோடு இருக்கிறாய் என்ற உன் நினைவுகளோடு வாழ்கிறோம். -யாழ்மைந்தன் Ravi

Tributes

Summary

Notices

அகாலமரணம் Tue, 28 Sep, 2021
நன்றி நவிலல் Thu, 04 Nov, 2021