சுவிஸ் Männedorf ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meilen ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா பவீந் அவர்களின் நன்றி நவிலல்.
கருவுற்ற நாளாகக் கண்ணின் இமைபோல்
காத்திருந்தோம்
நலமோடு நீ வாழ படைத்தவனே
வழி தந்தான்
படிப்பினிலே முன் நின்றாய்
இசையினிலும் நீ வென்றாய்
கவிமழை நீ பொழிந்தாய்
காவியங்கள் நீ படைத்தாய்
விடியலை நோக்கியோர்க்குத்
துணைக்கரம் நீ கொடுத்தாய்
பரிதவிக்கும் மக்களுக்காய்ப்
பாடுபட நீ முயன்றாய்
அன்பான இதயங்களைப்
பண்பாலே நீ வென்றாய்
உன் புன்னகையாலும் பேச்சாலும்
கட்டிப் போட்டாய் பலபேரை
பட்டங்கள் நீ சூடிப் பார்போற்ற
வாழ்வாய் எனவிருந்தோம்
மணமாலை நீ சூடிவரும் நாளைப்
பார்க்கவிருந்தோம்
படைத்தவன் சதியா இல்லை
விதியின் கதையா??
விழிமூடித் துயில் கொள்ள
விரைந்து நீ ஏன் சென்றாய்?
கரைதேடும் அலைபோன்று கரைகின்றோம்
தினம் நாங்கள்
நிலையில்லா வாழ்வுதனை
நிறைவு செய்தான் எம் பவீந்
மலர்தூவியனுப்புகின்றோம்
மண்ணில் நாம் வாழும் வரை
எம்முடனே நீ வாழ்வாய்.
உறவுகளோடு ஊரவரும் உள்ளன்பு நண்பர்களும் நாம் துன்புற்று நலிவிழந்த வேளையிலே நாடி வந்து துயரில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களிற்கும், எந்நேரமும் உடனிருந்து வழிநடத்தியவர்களிற்கும், மலர் வளையம் வைத்தவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்தோருக்கும் எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம் இக்கட்டான நேரத்தில் மனை தேடி வந்தோர்க்கும், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், தொலைத் தொடர்பில் ஆறுதல் அளித்தோர்க்கும் மற்றும் சகலவிதத்திலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களிற்கும் எம் வேதனை கலந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
மற்றும் மாதகல் மக்கள் வாழ உதவும் நிறுவனத்தினர்க்கும் மாதகல் நலன்புரிச் சங்கத்தினர்க்கும் எம் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்வரும் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00மணியளவில் Riedstegsaal, Bergstrasse 111, 8707 Uetikon am See, Switzerland எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் ஆத்மா சாந்தி நிகழ்வில் கலந்து எமது மகனாரின் ஆத்மா சாந்தி வேண்டிப் பிரார்த்திப்பதனோடு நன்றி நவிலல் நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மறுபடி என்று காண்பேனோ?மனதினை கொன்று வாழ்வேனோ? கருவறை சுமந்த தாய் மறந்தாய். கனவுகள் கண்ட தந்தையை மறந்தாய். உடன் பிறந்த சகோதரி மறந்தாய். உறவுகள் மறந்து உயிர் பிரிந்தாய். உன் நினைவுகளால் நம் கண்களை...