அம்மம்மா நீ சென்ற இடம் எங்கே!!! சொல்லாமல் சென்று விட்டாயே அம்மம்மா!!! உன் பேரப்பிள்ளைகள் நாம் இங்கு தவியாய் தவிக்கின்றோம்.. உன் பேரன் ஒருவன் உனக்கு கடைசி முத்தம் கொடுத்து அனுப்புவதற்கு முடியாமல் துடிக்கின்றான். நாட்டில் நிலவிவரும் சூழ்நிலையால் உனக்கு நாம் ஒன்றாக நின்று தீப்பந்தம் பிடிக்க முடியாமல் திணறுகின்றோம் அம்மம்மா.. உன்னுடைய மூத்த மகள் உனக்கு வந்து கடமை செய்ய முடியாத நிலையில் அங்கிருந்து அலறுகின்றா.. உன் சொந்தங்கள், பந்தங்கள், உற்றார், உறவினர்கள் யாருமே வந்து உன்னை வழி அனுப்ப முடியாத நிலமை. என் செய்வேன்.. காலன் இட்ட வழி இதுதான் உனக்கு.. அம்மம்மா உன் ஆத்மா சாந்தி அடைய எம் பெருமான் பிள்ளையாரையும், காளிஅம்மாளையும்,ஆஞ்சநேயரையும் உன் பாதம் வேண்டி நிற்கின்றேன். ஓம் சாந்தி...? ஓம் சாந்தி...? ஓம் சாந்தி...? பேத்தி:அனுசா
சிவகாமியம்மாவின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.