என் ஆயுசுக்குமாக நீ தந்துவிட்டுப்போன கண்ணீரை நான் என் செய்வதெனவும் நீ சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம் நீ மறைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டுருப்பாய் நான் உன்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நீ என்னை விட்டு ஓடிவிடாத வேண்டுதலை நான் யாசித்துக் கொண்டிருக்க, ஒளியும் இடம் பற்றி நீ யோசித்துக் கொண்டிருந்தாயா! உன் விலகலை அழ அழ பள்ளியில் விடப்படும் சிறுமியின் மனநிலையிலிருந்து பல தடவை ஒத்திகை பார்த்திருக்கிறேன் அத்தனை தடவையும் மீண்டு வந்து எனை அழைத்துப் போவதுதானே உன் வழக்கம்! எங்கிருந்து வந்தது இந்த புது பழக்கம்! பருப்பு பிடிக்கவில்லை என்றாய் உறைப்பு பிடிக்கவில்லை என்றாய் இப்படி பிடித்தது எல்லாம் பிடிக்காமல் போவதில்தான் என்னையும் சேர்த்தாயா! அதில் உன்னையும் சேர்த்தாயா! என் நினைவுகளின்அடுக்குகளெங்கினும் நீயே வியாபித்திருக்கிறாய் நான் உன்னையே தேடுகிறேன் உன்னையே கண்டடைகிறேன் உன்னையே தொலைக்கிறேன் உன்கூடவே விசும்புகிறேன் துளிர்கால ஒவ்வொரு அரும்பிலும் உன்னையே கண்டடைகிறேன்...
சிவகாமியம்மாவின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.