1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : 05-02-2026
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த உறவே!.
உங்கள் பெருமை ஒரு வரியில்
சொல்ல இயலுமோ!
எங்கள் கவியில் உங்களை வடிக்க
வார்த்தைகள் இல்லை எங்களிடம்!
காணிக்கை கேட்காத
தெய்வம் நீங்கள்
உங்கள் தோட்டத்தில் தான்
எத்தனை மலர்கள்?
எத்தனை நிறங்கள்?
எத்தனை குணங்கள்!
இன்று எங்களோடு நீங்கள்
இல்லாத உலகம் பகலில்
இரவு உங்கள் நினைவில்லாமல்
இதயம் நின்று விடுமே அம்மா..
எங்கள் உலகமே எங்கள் அம்மா
எங்களை விட்டு சென்று
இன்றுடன் ஓராண்டு ஆகியும் கூட
நேற்று வாழ்ந்தாற் போல்
நெஞ்சில் நினைவுகள்
நிழலாடுகின்றன இன்றும்…
தகவல்:
குடும்பத்தினர்