9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி
அடைய இறைவனை வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்...!!
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.