யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்- இனி
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன்
முடியுமா?...
என் தேவியின்
அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய முடியுமா?...
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை தவிக்கின்றேன்..
தள்ளாடுகின்றேன்.. தயங்குகின்றேன்..
என் தவமணியே...
ஆயிரம் உறவுகளிருந்தென்ன ஆகிடுமா...
உம் அன்புக்கு ஆகவில்லை அலைகின்றோம்- எம்
அன்னையின் அன்புக்காய்... எம் தாயே
நீங்கள் எம்மைவிட்டுச் சென்று
நாட்கள் மாதமாகி இன்று
வருடம் ஐந்து ஆகிவிட்டது- ஆனால்
இன்றும் எம் கண்முன்னே
மலையென உம் பூமுகம்- எம் நெஞ்சில்
கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உம் முகம் என்னாளும் உயிர் வாழும்
எம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்ட எம் பாசமிகு குல விளக்கின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.