Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUL 1969
இறப்பு 22 APR 2016
அமரர் சாரிகா செல்வநாயகம்
வயது 46
அமரர் சாரிகா செல்வநாயகம் 1969 - 2016 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

சாரிகாவே! எந்தன் ஆருயிர்த் துணைவியே!!

நிறைவாக மணவாழ்வில் நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும் களிப்புற கண்டோம்!
அறமோடு அன்பாக பணிகள் ஒரு மனதாய் ஆற்றினோம்
அன்பான இல்வாழ்வில் மூன்று பண்பான கண்மணிகளை
பார்புகழ வைத்தோம்!

இறுதிவரை என்னோடு உடன் இருப்பாய் என்றிருந்தேன்
ஆனால் பாழான காலனின் கண்பட்டதனால்
மண்விட்டு விண்தொட்ட உன் நினைவுகளில்
மனமெல்லாம் புண்பட்டு
கதறி அழுகின்றேன்...

ஆருயிர் அம்மாவே.......!
ஆண்டுகள் மூன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

புன்னகை முகத்தோடு பவனி வரும் காட்சி
இன்னமும் உறைந்து இருக்கு எம் மனதோடு!
தெய்வத்தின் திருவுருவே! எம் அன்னைக்கு
நன்றியின் சமர்ப்பணம் இதயத்தால் கோடி!!!

துயரோடு எமை விட்டு தூரமாய் சென்றீர் அம்மா
நினைவோடு என்றும் நீங்காது வாழ்வோம் நாம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
அன்புக் கணவர், அருமைப் பிள்ளைகள், சகோதரர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos