Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAR 1940
இறப்பு 05 APR 2019
அமரர் சரவணமுத்து சதாசிவம் 1940 - 2019 புங்குடுதீவு குறிகட்டுவான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 31-03-2024

இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ
நீங்கள் பயணமானீர்கள்..!
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ...

ஐந்தாண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா உம் நினைவின் பாசம்
மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை..!

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!

பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்

உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்