யாழ்.புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
புங்கை நகர் தந்த பூமகனே
சதா அந்த சிவனை வழிபடும் சதாசிவனே
எங்கு தான் சென்றாய் அப்பா
அகல விழி கொண்டு கண்ணில் உயிரை வைத்து
காற்றில் கலந்து விட்டாய்
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
காண்போம் நாம்
நீ பாடும் பண் கூட நம் வீட்டில் உன்னோடு
மரணித்து விட்டது அப்பா
விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர்
எனப் பிறர் சொல்லி கேட்டதுண்டு- அப்பா
உனை எந்த விண்மீனாய் நாம் காண்போம்
சுந்தரத் தமிழாலே கதை பேசும்
சித்திரமே உன் குரல் கேளாத வீடு
நித்தமும் நிசப்தமாய் கிடக்குதப்பா !
நீங்கள் இறந்ததாக இன்னும்
எங்கள் மனம் எண்ணவில்லை.
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைத்தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இறப்பு செய்தியை கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், நேரடியாக வந்தும் தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.