

மிகவும் அருமையான, அன்பான,பாசமான தாயாரின் துயரச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தோம்.எங்கள் தாயாரின் துயரச் செய்தி கேட்டு ஓடி வந்து, இன்னொரு தாயாராக நின்று ஆறுதல் தந்து வழி அனுப்பி வைத்தீர்கள்.உங்களை எப்படி அம்மா மறப்போம் !! கைமருந்து,ஆரோக்கியமான வாழ்வு, நல்ல அறிவுரைகள் என உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டீர்கள்.உங்களிடமிருந்து இருந்து நல்ல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொண்டோம்.நன்றியோடு எப்போதும் உங்களை நினைத்துக் கொள்வோம்.எங்கு கண்டாலும் கட்டி அணைத்து முத்தமிட்டு,அன்பை வெளிப்படுத்தும் தாயுள்ளம் கொண்டவரம்மா. நீங்கள் எங்களோடு பழகிய நாட்களும், நாங்கள் உங்களைச் சுற்றி இருந்த காலங்களும்,கண்ணிறைந்து கண்ணீர் மல்க நிழலாகி நிற்கின்றன அம்மா. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அப்பா, மித்திரன் அண்ணா ,அனுஷா அக்கா ,ஷாமினி ,தரண் மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் ஆறுதலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Our deepest condolences Thoughts are with the family Shanthini and Thava Seelan Sydney