Clicky

தோற்றம் 03 APR 1935
மறைவு 28 JUL 2021
அமரர் சரஸ்வதி ஆறுமுகம் 1935 - 2021 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
03 APR 1935 - 28 JUL 2021
Late Saraswathy Arumugam
வேலணை மண்ணின் மறவா மங்கை சரஸ்வதி அம்மாள் இயற்கை எய்தியமை குறித்து.. மண்ணின் மைந்தன் திரு பாலா மாஸ்டர் (UK) தந்த அனுதாப வரிகள்... வேல் மண்ணின் வெண்பவளம் பொன்னம்மா பெற்ற கார்முகிலின் மதியுறையாள், வேலவன் மறுபெயராம் ஆறுமுகம் ஐயா கண்ட அரும்பிறை சம்சார நாயகி, பெத்தார் அவர்மகள் பெருங்குலத்து பெருமகள் சரஸ்வதி அம்மா பேருடன் வாழ்ந்து பெருமை சேர அறுவராய் ஆருயிர் மக்களை பெற்று அவரவர் பேருடன் வாழ்கையிலே. காலம் இதுவென காலன் அழைக்கையில் வேளை இதுவென.. வெம்பியழும் மக்களை வாழிய நீவிர் நீடூழி என்றே வாழ்த்தியே கனவிலும் நான்வருவேன் கலங்காதே எம் செல்வங்களே என்று நினைவிடை கலங்கி எண்பத்தாறு அகவை கடந்தே பிடிமுகன் தந்தை எம் ஈசனவன் அத்தன் அவன் காலடி கண்டாளே அங்கே அவளது ஆன்மா அமைதி கண்டதே......சரஸ்வதி அம்மா வாழிய உன் நாமமே ..உற்றாரே உடன் பிறந்தாரே, அம்மையவள் அருமை பிள்ளைகளே.. எல்லோரும் வளம் கண்டே வாழ்ந்தே பல குடும்ப களம் கண்ட அன்னையை அவள் ஆத்மா வைகுண்டமதில் ஆறுதலடைய வழியது அனுப்பி வைத்தே அமைதியே கண்டிடுவீரே... எமக்கும் ஒருநாள் மீண்டு வரும் வழியிதுவே என்றதுவாய் ஏற்றிடுவோமே இயற்கை தனின் முடிவும் இதுவே...
Write Tribute

Tributes