வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்ததிருமதி சரஸ்வதி ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும்,தொலைநகல், மின்னஞ்சல், RIPBook ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி