
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் தம்பிஐயா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் ஊற்றாய் பாசத்தின் திருவுருவாய்
ஆலமரமாய் வாழ்ந்து அன்பு நிழல் அளித்தீரே
ஆணி வேரே சாய்ந்த பின் ஆறுதல் தருவது யாரோ!
அன்றில் பறவையாய் வாழ்ந்த 46 வருட
வாழ்க்கை கனவானதே நேசத்தை
கொடுத்த நீர் சுவாசம் மறந்தது ஏனோ
உம் பிரிவால் வாடும் மனைவி!
தன்னிகரில்லா தந்தையாய் தரணியில் திகழ்ந்தீரே
கண்ணின் மணிகள் நாங்கள் கண்களின்றி
காண்பது எங்ஙனம்? எம்மை துயரத்தில்
மூழ்க வைத்து சென்றது ஏனோ அப்பா!
யார் வந்த போதும் உடன் விளையாடிய
போதும் தாத்தா என ஆகுமே!
கரை வந்து மோதும் அலையாய் தேடி
அலையும் பேரன், பேத்தியின் விழிகள்!
பாச மலரினை பாங்குடன் நடத்தினீரே!
உம் நினைவுகளை எண்ணி உறவாடும்
அன்புத் தங்கையின் இதய குமுறல் கேட்டாயே!
விளக்கின் அடியில் புடர்ந்திருக்கும்
இருள் போல மன வேதனையில்
தத்தளிக்கும் மருமக்கள்
அத்தான் என அழைத்த போதும்
தந்தை போல் எம்மை அரவணைத்தீரே!
உம் இழப்பால் வாடும் மைத்துனிகள்
வார்த்தைகள் வசப்படவில்லை
விழி நீரும் வற்றிப் போனதே
நினைத்துப் பார்க்காத இழப்பு
எதிர் பாராத அழைப்பு
மறு ஜென்மம் தருவாயே இறைவா!!
Rest in peace Panchu anna