
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திசேகரம் தம்பிஐயா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்பில் திருவுருவாய்
பாசத்தின் நாயகனாய்
குடும்பத்தின் குலவிளக்காய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தெய்வத்துள் ஒன்றானீர்
உம் இழப்பினை ஏற்றுக் கொள்ள முடியாமல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
ஐயிரண்டு விழிகள்!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது சென்னை இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியையின் போது எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பங்கு கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலமாக அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace Panchu anna