திதி:27/11/2024
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடு 3ம் கண்டத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Dartford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சன்னதிநாதன் தம்பிராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் மனைவி,பிள்ளைகள்,
மருமகள், பேரப்பிள்ளை
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஒன்றாக விளையாடி ஒன்றாக பயணித்த அந்த வாழ்க்கை மற்றும் உங்கள் முகத்தை என்றும் மறக்க முடியாது....