Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 APR 1967
விண்ணில் 01 DEC 2021
அமரர் சன்னதிநாதன் தம்பிராசா (சிறி)
வயது 54
அமரர் சன்னதிநாதன் தம்பிராசா 1967 - 2021 வளலாய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடு 3ம் கண்டத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Dartford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சன்னதிநாதன் தம்பிராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:09/12/2023

அன்பின் திருவுருவே அப்பா!
அருள் நிறைவின் இருப்பிடமே அப்பா!
பண்பின் சிகரமே அப்பா!
பாசத்தின் பிறப்பிடமே அப்பா!
ஏற்றமிகு எங்கள் வாழ்வின்
உயர்வுக்கு ஏணியாய் திகழ்ந்தவரே!
உன்னையே உருக்கி
 ஒளி தந்து மெழுகுவர்த்தியே!
வேரென இருந்து எம்மை கார்த்தீர்கள்,
விழுதுகளாய் நாமிருந்தோம்!!

கள்ளமற்ற உன் முகத்தை
 கண்டாலே போதுமய்யா!
உள்ளமெல்லாம் உவகை
கொள்ளும் உலகமே மறந்துவிடும்
பிரிந்து நீ சென்றெமக்கு
பெருந்துயரைத் தந்தாலும்- நாம்
வருந்துகின்றோம் உன் நினைவால்
 வந்துவிடு வையகத்தில்!

ஆருயிர்க் கணவராய்
 அருமைமிகு அப்பாவாய்
பண்பான மாமாவாய்
பாசமிகு பேரனுமாய்
அன்பான உற்றார், உறவுகளும்
 ஊர்மக்கள் எல்லோரும்- நாம்
கண் துஞ்சாது உனை காண்பதற்கு காத்து உள்ளோம்!

உன் நெஞ்சார வந்து
எம்மை நீடூழி வாழ்த்திவிடு!
காலத்தால் அழியாது
எம் கனவினிலும் உன் பிரிவு
ஞாலத்தில் வந்துவிடு தினம்
நம் துயரம் தீர்த்துவிடு!
ஆண்டு இரண்டு ஆனாலும்
 எம் ஆழ்மனதில் நீ இருப்பாய்
நீண்டு செல்லும் காலமெல்லாம் எம்
 நெஞ்சமதில் நிலைத்திருப்பாய்!

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை
வேண்டி பிரார்த்தித்து அஞ்சலி செய்கின்றோம்!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்