Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 DEC 1971
இறப்பு 14 AUG 2023
அமரர் சங்கரப்பிள்ளை சிவகுமார்
B A(HONS), M A(PUB.AD-ENG), அபிவிருத்தி உத்தியோகத்தர், பதில் கடற்றொழில் பரிசோதகர், அகில இலங்கை சமாதான நீதவான், மொழி பெயர்ப்பாளர் தமிழ்- சிங்களம், சிங்களம்- தமிழ், சிங்கள போதனாசிரியர்- அரசகரும மொழி திணைக்களம்
வயது 51
அமரர் சங்கரப்பிள்ளை சிவகுமார் 1971 - 2023 புலோலி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் கனிவான பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று அதிகாலை 05.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அஸ்தி கரைக்கப்பட்டும் (வீட்டிலிருந்து மு.ப 05.00 மணியளவில் வாகனம் புறப்படும்) 13-09-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண கிரியையிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஆனைப்பந்தி,
உடுப்பிட்டி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.