யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரேதேச செயலகம், கரவெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜன்(மாணவன் - யாழ்.ஹாட்லிக்கல்லூரி), அட்சயன்(மாணவன் - யாழ்.ஹாட்லிக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசங்கர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மோகனரூபி, உமாதேவி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), கிரிஷா(லண்டன்), யசோதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகரன், பவானிதேவி, இராஜகுமார், ஜெயராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பவாளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.