அன்பு சங்கீதாவுக்கு சுபா அத்தையின் சமர்ப்பணம் அன்பின் இருப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் பண்பின் புகழிடமாய் தைரியத்தின் சிங்கமாய் குடும்பத்தின் குலவிளக்காய் நல்லொழி வீசி தாய்,தந்தை,தம்பி,அரைவணைத்தாயே. போகும் போது எங்களுடன் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் கடைசி பயணம் போனது ஏனோ? ஊனும் உயிரும் உன் பிரிவால் உருகி தவிக்கிறது கீதா.நாளெள்ளாம் கொண்ட துயர் சற்றேனும் குறையாது கீதா. எந்த இடர் வந்தாலும் குறையாத உன் கருணை அழியாது என்றும் ஒளி வீசும்.உன் ஆத்மா சாந்தி அடைய சிவன் மடியில் இன்பமாக உறங்கு சங்கீதா. கடைசி வரையும் கைவிடமாட்டேன் என்று கரம் பிடித்த உன் கணவனையும், இறுதி வரையும் துணை இருப்பேன் என்ற உன் அன்பு மகனையும் விட்டு பிரிந்தது எப்படி? எல்லாம் காலன் செய்த விளையாட்டு எல்லோருக்கும் பிடித்து விட்டது போலும் விட்டாயே அம்மா. உன் ஆத்மா சிவன் மடியில் சாந்தியடைய அத்தையின் கண்ணீர் அஞ்சலி. சிவனின் இறை ஜீவனுக்குள் கலந்து விடு சங்கீதா..