புத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Tessin ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கீதா ஜெயதீபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து 31 நாட்கள் ஆனதே
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்...
உணர்வற்ற உடலோடு
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும் அம்மா...
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும்
மூழ்கித் தவிக்கிறோம்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.