முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகிர்தா பிரதீஸ் அவர்களின் நன்றி நவிலல்.
தாலாட்டி சீராட்டி
வளர்த்த தங்காவே
தாயை விட்டு
தனிமையில் சென்றாயோ
அம்மா என்று
அன்புருகிடும் செல்லமே
எங்கு சென்றாய்
என் தொப்புள்கொடியே
அப்பாவென ஆசையுடன்
அழைக்கும் ஆருயிரே
பேசிய பேச்சுகள்
மௌன மொழியாகி
மாதம் ஒன்றும்
கடந்து கிடக்குது
உனக்கு மரணமா
ஒப்பாரியில் புலம்புகின்றேன்
என்னவளே இனியவளே
என்னைத் தாங்கியளே
ஏனிந்த அவசரம்
என்னைத் தவிக்கவிட்டு
எங்கு சென்றாய்
தேடாத இடமெல்லாம்
தேடுகின்றேன் திருமுகத்தை
மீண்டு வருவாயோ?
உடன்பிறப்பே உயிரே
ஓவியமே ஒன்றானவளே
உன்பிரிவால் துயருறும்.
கணவர், அப்பா, அம்மா, அண்ணா, தங்கை..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
In solemn remembrance of five years past, we honor a life that touched hearts with quiet grace and enduring dignity. Though time has drawn its veil, the memory of their presence remains luminous,...