முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகிர்தா பிரதீஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-04-2024
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே!
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும்
யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் அன்பே!
நமக்காக யோசிக்க
ஒரு வாழ்க்கை துணை இருக்கின்றது
என்பதை உணரும் போது
என்னை விட்டு பிரிந்து விட்டீர்கள்...
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்...
புன்னகை பூ ஒன்று பூக்காமல் உதிர்ந்தது
சில்லறை சிதறும்
சிரிப்பழகி
சிலையாய் தூங்குகிறாள்...
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
மூன்று ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான்
அழிந்தது தங்கமே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள்
என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும்
எத்தனை வருடங்கள்
சென்றாலும்
மறவோம் அன்பு மகளே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் என்றும்
உங்கள் நினைவுகளோடு அன்புடன்
கணவர், தந்தை, தாய், அண்ணன், தங்கை மற்றும் உறவினர்.
In solemn remembrance of five years past, we honor a life that touched hearts with quiet grace and enduring dignity. Though time has drawn its veil, the memory of their presence remains luminous,...