

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகிர்தா பிரதீஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள்
சுமந்தவன் தவிக்கின்றான்
காலனவன் கொடியவனே
அறிந்திலனோ எங்கள் நிலை
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!......
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன?
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று
ஆண்டுகள் நான்கு உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்
அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்!!
உங்கள் பிரிவால் வாடும் என்றும்
உங்கள் நினைவுகளோடு அன்புடன்
கணவர், தந்தை, தாய், அண்ணன், தங்கை மற்றும் உறவினர்.