யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாய்சங்கர் விநாயகமூர்த்தி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஒரு நாளும் மாறாது - எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன் - பந்தம்
ஆண்டு ஆறு சென்றாலும் - எம்
மனங்களில் நிறைந்திருக்கிறாய் - அண்ணா
ஆண்டு ஆறு போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது உங்கள்
நினைவு ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்
துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி மகிழ
வைத்தீரே யார் கண்பட்டு மறைந்து
போனீரோ தாமரை மலர் நீரில்
ஆடுவதுப்போல நாங்கள்
உமைப்பிரிந்து தத்தளித்து மனம்
ஆடுகின்றதே எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ
தான்? அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில் சாந்திபெற
பிரார்த்திக்கின்றோம்.
Rest In Peace our deepest condolences goes out to your family during this time