3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாய்சங்கர் விநாயகமூர்த்தி
1974 -
2020
கொட்டடி, Sri Lanka
Sri Lanka
Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாய்சங்கர் விநாயகமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று
இருந்தால் அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
இந்த மண்ணில் உம்மைப்
போல் யார் வருவார்? எம்
துயர் போக்க எண்ணிப்
பதைக்கின்றோம் விண்ணில்
தேடுகின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்